டெல்லி: டெல்லியில் 2-வது நாளாக கடும் பனி மூட்டம் காரணாமாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லி, உத்திரபிரதேசம் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. பனி மூட்டம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு விபத்துகளில் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர்.