பாஸ்போர்ட் வைத்திருப்போர் தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை பேர்? மத்திய அரசு கெத்து டேட்டா!

வெளிநாடுகளில் செட்டில் ஆக விரும்பும் நம் நாட்டு இளைஞர்களின் முதல் கனவு தேசமாக, டாலர் சேதமான அமெரிக்கா இன்றும் இருக்கிறது. அமெரிக்காவை அடுத்து பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்திய இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. சமீபகாலமாக கனடா, இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பை அளித்து வருகிறது.

இப்படி அமெரிக்கா, பிரிட்டன், கனடா என எந்த வெளிநாட்டுக்கு சுற்றுலாவுக்கோ, வேலைக்கோ செல்ல வேண்டும் என்றாலும் அதற்கு அடிப்படை ஆவணமாக இருப்பது பாஸ்போர்ட் எனப்படும் கடவுச்சீட்டு தான். வெளிநாட்டு செல்ல வேண்டும் என்று விரும்புபவர்கள் முதல் வேலையாக பாஸ்போர்ட் வைத்திருந்தால் தான், அதன் பிறகு விசா போன்றவற்றுக்கு விண்ணப்பிக்க முடியும்.

எனவே, வேலைநாட்டுக்கு போகும் வாய்ப்பு எப்போது வருமோ தெரியாது… ஆனால் எதற்கும் எடுத்து வைத்துவைப்போமே என்று பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் விரைவில் 10 கோடியை எட்ட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், இந்திய அளவில் டிசம்பர் இரண்டாவது வாரம் வரை, இந்திய அளவில் பாஸ்போர்ட் வைத்திருப்போரின் மொத்த எண்ணிக்கை 9.6 கோடி ஆக உள்ளது. இது மொத்த மக்கள்தொகையில் 7.2 சதவீதம் ஆகும். இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த எண்ணிகை 10 கோடி தொடும்.

அதிகபட்சமாக கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். இதுவே தமிழ்நாட்டில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது. தமிழ்நாட்டை விட இரண்டு மடங்கு மக்கள்தொகை அதிகம் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் 87.9 லட்சம் பேரிடம் மட்டுமே பாஸ்போர்ட் உள்ளது. தமிழ்நாட்டைவிட மக்கள்தொகை குறைவாக இருந்தாலும், கேரளாவில் அதிகம் பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.

பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகள் கடுமையாக இருந்தால், இதனை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இந்த நிலையை மாற்றும் நோக்கில் பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் பயனாக கடந்த 2015 இல் 21 நாட்களாக இருந்த பாஸ்போர்ட் வழங்குவதற்கான காலம், தற்போது வெறும் 6 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.2015 -2022 வரை நாடு முழுவதும் பிஎஸ்கே எனப்படும் 368 பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன” என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளியுறவுத் துறை அமைச்சகமே நேரடியாக பாஸ்போர்ட் வழங்கும் பணியை மேற்கொண்டிருந்தது. தற்போது இந்த பணி தனியார் நிறுவனமான டிசிஎஸ்சின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.