முன்னாள் காதலியை அச்சுறுத்தி கப்பம் பெற்ற நபர்-வவுனியாவில் சம்பவம்


வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன், யுவதி ஒருவரை அச்சுறுத்தி இரண்டு லட்சம் ரூபாயை கப்பமாக பெற்றுக்கொண்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புகைப்படங்கள் மற்றும் காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தல்

முன்னாள் காதலியை அச்சுறுத்தி கப்பம் பெற்ற நபர்-வவுனியாவில் சம்பவம் | Man Extorted By Threatening Ex Girlfriend

நகரசபை உறுப்பினரின் மகன் காதலித்ததாக கூறப்படும் யுவதியிடம் இந்த பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக யுவதியின் அத்தை நேற்று முன்தினம் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேக நபர் யுவதியை காதலித்த காலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிரப்போவதாக அச்சுறுத்தி இந்த பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

யுவதி மற்றுமொருவரை திருமணம் செய்துக்கொள்ள போவதாக அறிந்துக்கொண்ட பின்னர் சந்தேக நபர், பழைய புகைப்படங்கள் மற்றும் காணொளி பற்றி கூறி யுவதியை அச்றுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.