வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உருவ படத்துடன் கூடிய புதிய கரன்சி நோட்டுகள் அந்நாட்டு வங்கி வெளியிட்டுள்ளது.
70 ஆண்டுகளாக பிரிட்டனின் மகாராணியாக மகுடம் சூடிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு, நாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பிரிட்டனில் தயாரிக்கப்படும் நாணயங்களில் இனிமூன்றாம் சார்லஸ் மன்னரின் அதிகாரப்பூர்வ உருவமும் பொறிக்கப்படும் அறிவிக்கப்பட்டு அதன்படி மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவத்துடன் புதிய நாணயங்களை கடந்த செப்டம்பரில் பிரிட்டனின் ராயல் மிண்ட் வெளியிட்டது.
![]() |
இந்நிலையில் பிரிட்டனில் தற்போது உள்ள கரன்சி நோட்டுகளில் மூன்றாம் சார்லஸ் உருவ படத்துடன் பிரிட்டன் வங்கி அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இதன்படி 5 பவுண்ட், 10 மற்றும் 20, 50 பவுண்ட் ஆகிய மதிப்புடைய கரன்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement