ராஜஸ்தான்: `வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.500-க்கு காஸ் சிலிண்டர்' – முதல்வர் கெலாட்

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் பேரணியில் ராகுல் காந்தியுடன் கலந்துக் கொண்ட ராஜஸ்தானின் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது,” அடுத்த மாதம் மாநில பட்ஜெட்டுக்கு தயாராகி வருகிறேன்… இப்போது ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். உஜ்வாலா திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி ஏழைகளுக்கு எல்.பி.ஜி இணைப்புகளை வழங்கினார். ஆனால் அந்த சிலிண்டர்கள் காலியாக இருக்கிறது.

இப்போது ஒரு சிலிண்டரின் விலை ரூ.1,040 வரை இருக்கிறது. எனவே, வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் ஏழைகள் மற்றும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் என, சிலிண்டர் ஒன்று ரூ 500-க்கு வழங்குவோம்” எனத் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, பேசிய ராகுல் காந்தி, அசோக் கெலாட் அரசின் சாதனைகளைப் பாராட்டினார். குறிப்பாக அரசின் சார்பில் திறக்கப்பட்ட 1,700 ஆங்கில வழிப் பள்ளிகளைப் பற்றி குறிப்பிட்டு பாராட்டினார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்

அடுத்த ஆண்டு ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியமைக்க காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப் பூசல் நிலவுகிறது. முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கிடையே பனிப்போர் நிலவுவது குறிப்பிடதக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.