பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை: தாலிபான்களுக்கு அமெரிக்கா கண்டனம்!

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள இடைக்கால தடைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான்கள் மீண்டும் கால் பதித்தனர்.

ஆப்கானிஸ்தானில் ஓராண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் தாலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தாலிபான்கள் இடைக்கால தடை விதித்தனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும் என்றும், அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தாலிபான்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

முட்டாளை கண்டறிந்த பின் பதவி விலகல்: எலான் மஸ்க் தகவல்!

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு இடைக்கால தடை விதித்துள்ள தலிபான்களின் முடிவை அமெரிக்கா கண்டிக்கிறது. இந்த மோசமான முடிவுவானது ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும், அவர்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் தாலிபான்கள் தலைமையின் எடுக்கப்பட்ட சமீபத்திய முயற்சியாகும்.

ஆப்கானிஸ்தானின் மக்கள் தொகையில் பாதியளவு உள்ள பெண்களின் கல்வியை தடுத்து நிறுத்தும் இந்த ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாட்டின் விளைவாக, தாலிபான்கள் சர்வதேச சமூகத்திலிருந்து மேலும் விலகி அவர்கள் விரும்பும் சட்டப்பூர்வமான தன்மை மறுக்கப்படும்.

இந்தப் பிரச்னையில் எங்களின் கூட்டு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுடன் அமெரிக்கா தொடர்பில் உள்ளது.

ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவாகவும், அந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான ஆதரவை வழங்குவதற்கும் எங்களின் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.