கார்- லாரி மோதி அக்கா, தம்பி உள்பட 3 பேர் பரிதாப பலி

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் திருவேங்கடம்  அருகே  வையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர்கள் அந்தோணி முத்துராஜ்.- பாண்டியம்மாதேவி. இவர்களது மூத்த மகன் பால்முத்துபிரபு (39), மனைவி, 2 மகன்கள் உள்ளனர். சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து  வந்தார். தற்சமயம் வீட்டிலேயே தங்கி வேலை செய்துள்ளார். மற்றொரு மகன் ஜெகன்ராஜ்  பிரபு சென்னை ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.  

இவருக்கும் திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. மகள் சுதா சற்குணலில்லிக்கும் (37) திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள்  உள்ளனர். நேற்று  அதிகாலை குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு ஆண்கள் ஒரு  காரிலும், பெண்கள் ஒரு காரிலும் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி வழியாக ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

திருச்செந்தூர் அடுத்த பழையக்காயல் அருகே சென்றபோது இவர்களது காரும், எதிரே வந்த லாரியும் மோதிக்கொண்டன. இதில் காரை ஓட்டி வந்த பால் முத்து பிரபுவும், அவரது சகோதரி சுதா சற்குணலில்லி, அவரது மாமியார் தமிழ்ச்செல்வி ஆகியோர் இறந்தனர். காயமடைந்த 6 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.