தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் ,இலங்கை மது, போதைவஸ்து தகவல் நிலையத்திற்கும் இடையில் உடன்படிக்கை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை ,கலாசராப் பீடத்திற்கும் இலங்கை மது மற்றும் போதைவஸ்து தகவல் நிலையத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

‘பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மது, புகையிலை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வையும் அறிவையும் மேம்படுத்தி  பிராந்திய, சமூக பிரச்சினைகளை கையாளச் செய்தல்’ எனும் கூட்டு நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வு (20) ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.

கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம் பாஸில் தலைமையில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மற்றும் இலங்கை மது மற்றும் போதைவஸ், தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமணசேகர ஆகியோர் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.