பிரித்தானியாவை 6 நிமிடத்தில் அழிக்கும்…இந்த ஆண்டின் இறுதியில் புடின் வகுத்துள்ள பயங்கர திட்டம்


பிரித்தானியாவை 6 நிமிடங்களில் தாக்கி அழிக்கும் பயங்கரமான “சாத்தான் அணு ஆயுத ஏவுகணையை” விரைவில் போர் தாக்குதலில் நிலைநிறுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் உறுதியளித்துள்ளார்.

சாத்தான் ஏவுகணை

உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி போர் நடவடிக்கை தொடங்கிய பிறகு முதல் முறையாக டிசம்பர் 21ம் திகதி புதன்கிழமை வெளிநாட்டு சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து கூடுதல் இராணுவ உதவி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அதே சமயம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் தனது இராணுவ தலைவர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

பிரித்தானியாவை 6 நிமிடத்தில் அழிக்கும்…இந்த ஆண்டின் இறுதியில் புடின் வகுத்துள்ள பயங்கர திட்டம் | Putin Pledges To Deploy Satan Nuke It Could Hit Uk Vladimir Putin – விளாடிமிர் புடின் (AP/REX/Shutterstock)

இந்த ஆலோசனையின் போது ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனின் ஆயுதம் திரட்டும் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யாவின் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஹைப்பர்சோனிக் சாத்தான்-2 ஏவுகணைகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் போர் முனையில் நிலைநிறுத்த போவதாக ஜனாதிபதி புடின் உறுதியளித்துள்ளார், அத்துடன் இவை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சாத்தான் 2 அணு ஆயுதம் குறித்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் விவரித்து இருந்த புடின், “SARMAT மிக உயர்ந்த தந்திரோபாய மற்றும் தொழில்நுட்ப பண்புகளை கொண்டது மற்றும் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பிற்கான அனைத்து நவீன வழிமுறைகளையும் சமாளிக்கும் திறன் கொண்டது. 

இது உலக அளவில் ஒப்புமைகள் இல்லாதது மற்றும் இந்த ஏவுகணைக்கு சமமான ஏவுகணை நீண்ட காலத்திற்கு இருக்காது என்றும் தெரிவித்து இருந்தார்.

6 நிமிடங்களில் பிரித்தானியாவை அழிக்கும்

சாத்தான்-2(Satan-2) என்று அழைக்கப்படும் சர்மாட்-2 (SARMAT-2) RS-28 ஏவுகணை ரஷ்யாவின் ஆயுத களஞ்சியத்தில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இது தடுக்க முடியாதது மற்றும் 7.5 டன் போர் ஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் கொண்டது, அத்துடன் இந்த SARMAT கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், 10 அல்லது அதற்கு மேற்பட்ட அணு ஆயுதங்கள் மற்றும் டிகோய்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

பிரித்தானியாவை 6 நிமிடத்தில் அழிக்கும்…இந்த ஆண்டின் இறுதியில் புடின் வகுத்துள்ள பயங்கர திட்டம் | Putin Pledges To Deploy Satan Nuke It Could Hit UkGetty Images/iStockphoto

இந்த SARMAT RS-28 திரவ எரிபொருள் ராக்கெட் ஆனது, பிரித்தானியா உட்பட 11,000 மைல்கள் தொலைவில் உள்ள இலக்குகளை 6 நிமிடங்களில் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
 

இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டால் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் அழிந்து விடும் என்று ரஷ்ய அரசு தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் சிரித்து கொண்டே விவரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.