பேலியாகொட மத்திய மீன் சந்தையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன ஆகியோர் (21) கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டனர்.
சந்தைக்கான வாகனத் தரிப்பிடத்தினை விஸ்தரிப்பதற்கான ஏதுநிலைகள் தொடர்பாக இதன்போது ஆராய்ந்தனர்
குறித்த விடயம் தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில், சந்தை வளாகத்தின் அருகில் காணப்படுகின்ற வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான தரிசு நிலத்தில் வாகனத் தரிப்பிடத்தினை விஸ்தரிப்பது தொடர்பாகவும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போக்குவத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன ஆகியோர் சம்மந்தப்பட்ட தரிசு நிலத்தினை பார்வையிட்டதுடன், அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்து, அமைச்சரவையின் அனுமதியுடன் சந்தைக்கான வாகனத் தரிப்பிடத்தினை விஸ்தரிப்பதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.