Nayanthara: காதல் மனைவி நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த 2 அசத்தல் பரிசுகள்!

காதல் மனைவி நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த அசத்தல் பரிசுகள் தெரியவந்துள்ளது.

படப்பிடிப்பில் மலர்ந்த காதல்இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும், நானும் ரவுடிதான் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் தங்களின் குடும்பத்தினர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டு லிவ் இன் ரிலேஷஷ்ஷிப்பில் இருந்து வந்தனர். ரிலேஷன்ஷிப்பில் இருந்த போதே இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தனர்.வாயடைக்க வைத்த மகாலட்சுமி!
7 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம்தாங்கள் வெளிநாடுகளில் ஓய்வை கழிக்கும் போட்டோக்களை ஷேர் செய்து இணையத்தை திணறடித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இருவரும் ஊர் அறிய திருமணம் செய்து கொண்டனர். சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வரை ஏராளமானோர் பங்கேற்றனர்.
இரட்டை குழந்தைகள்அவர்களின் திருமண கவரேஜ் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்தனர். இதனால் திருமணத்தில் கூட நயன்தாரா காசு பார்த்து விட்டார் என விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் நயன்தாரா அதற்கெல்லாம் அசரவில்லை. தொடர்ந்து திரைப்படங்கள், ஹனிமூன் என பிஸியாக இருந்து வந்தார். இந்நிலையில் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாகி விட்டோம் என கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தனர்.Dhanya Balakrishna: தனுஷ் பட இயக்குநரை ரகசிய திருமணம் செய்த ‘ராஜா ராணி’ நடிகை? பரபரக்கும் கோலிவுட்!
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிதிருமணம் ஆகி 4 மாதங்களில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் அப்பா அம்மா ஆனதை அறிந்த ரசிகர்கள் ஷாக்காயினர். இதனால் சர்ச்சைகளும் ஏற்பட்டது. ஆனால் தங்களுக்கு 2016ஆம் ஆண்டே பதிவு திருமணம் முடிந்து விட்டது என்றும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக ஆதாரங்களுடன் அறிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
விக்கி கொடுத்த பரிசுஇந்நிலையில் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படத்தின் ப்ரமோஷன்களில் பங்கேற்று வருகிறார் நயன்தாரா. இதில் பல சுவாரசிய தகவல்களை கூறி வருகிறார். அந்த வகையில் தனது கணவர் தனக்கு அளித்துள்ள இரண்டு பரிசு பொருட்கள் குறித்து கூறியுள்ளார் நடிகை நயன்தாரா. அதாவது நயன்தாராவுக்கு காஸ்ட்லியான வாட்ச் மற்றும் ‘V’ எழுத்துள்ள பிரேஸ்லெட் ஆகிய இரண்டையும் விக்னேஷ் சிவன் பரிசாக கொடுத்துள்ளார்.
ஒருவருக்கொருவர் குறைந்தவர் இல்லைவிக்கி கொடுத்த அந்த பரிசுகளை தான் அணிந்துக் கொண்டு பெருமிதத்துடன் காட்டியுள்ளார் நடிகை நயன்தாரா. அதனை பார்த்த ரசிகர்கள் அன்பை வெளிப்படுத்துவதில் ஒருவருக்கொருவர் குறைந்தவர் இல்லை என் கூறி வருகின்றனர். விக்னேண் சிவன் பிறந்தநாளை துபாயில் சொகுசு படகில் இருந்தப்படி விமரிசையாக கொண்டாடினார் நயன்தாரா. இதனால் நெகிழ்ந்துப் போன விக்னேஷ் சிவன் தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளையும் மறக்க முடியாததாய் மாற்றி வருகிறார் நயன்தாரா என நெகிழ்ந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Nayanthara

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.