Varisu Audio Launch: இது என்னய்யா புது பிரச்சனை!: வாரிசு இசை வெளியீட்டு விழா நடக்குமா?

உலக மக்கள் பயத்தில் இருக்கும் இந்த நேரத்தில் வாரிசு பட இசை வெளியீட்டு விழா நடக்குமா என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

வாரிசுவம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, ஷாம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் வாரிசு படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் தமன் இசையில் வெளியான அம்மா பாடல் விஜய் ரசிகர்களை கவர்ந்துவிட்டது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் சென்னையில் நடக்கவிருக்கிறது.
விளம்பரம்வாரிசு இசை வெளியீட்டு விழா தொடர்பாக தயாரிப்பு தரப்பு விளம்பரம் செய்து வருகிறது. இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விஜய்யை பார்க்கும் ஆசையில் டிக்கெட் வாங்கி வருகிறார்கள் ரசிகர்கள். விஜய்யை காண ரசிகர்கள் துடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடக்குமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
கொரோனாகொரோனா வைரஸின் புது வகை சீனாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த புது வகை வைரஸ் இந்தியாவுக்கும் வந்துவிட்டது. இதையடுத்து விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற ஒரு நேரத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழா நடக்குமா என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ரசிகர்கள்புது வகை கொரோனா வைரஸால் சீனாவுக்கு தான் பெரும் அச்சுறுத்தல். மற்ற நாடுகளுக்கு அந்த அளவு பாதிப்பு இருக்காது. மேலும் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒன்றும் அதிகரித்துவிடாது. அதனால் வாரிசு இசை வெளியீட்டு விழா நிச்சயம் நடக்கும், நாங்கள் தளபதி சொல்லப் போகும் குட்டிக் கதையை கேட்போம் என விஜய் ரசிகர்கள் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர்.
ரஷ்மிகாவாரிசு படத்தில் விஜய்யின் தீவிர ரசிகையான ரஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இசை வெளியீட்டு விழா மேடையில் விஜய் பற்றி நிறைய சுவராஸ்யமான விஷயங்களை தெரிவிப்பார். மேலும் விஜய்யுடன் சேர்ந்து க்யூட்டாக போஸ் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ரஞ்சிதமேவாரிசு படத்தில் வரும் ரஞ்சிதமே பாடலை விஜய் பாடியிருக்கிறார். அந்தா பாடலும், தீ தளபதி பாடலும் வெளியானபோது வீரசிம்ஹா ரெட்டி படத்திற்காக பாலகிருஷ்ணாவுக்கு அருமையாக இசையமைத்துவிட்டு விஜய்யை கவுத்திட்டாரே தமன் என தமிழ் சினிமா ரசிகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தான் அம்மா பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.