ஆப்கானில் உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடிப்பு

காபூல்,

தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது.

இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். மேலும் சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்நிலையில், உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் இன்று ஹெராத் நகரில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மாகாண ஆளுநரின் இல்லத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர். கல்வி எங்களின் உரிமை என்று முழக்கங்கள் எழுப்பியபடி சென்றனர்.

அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் கலைந்து செல்லாததால், பாதுகாப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆங்காங்கே போராட்டம் நடைபெறுவதால், ஒவ்வொரு வீதியிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.