ஈரோடு: ஈரோட்டில் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியினரும் இரு பிரிவுகளாக பிரிந்து மாலை அணிவித்ததால் அக்கட்சியினர் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணியின் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, முன்னாள் மேயர் மல்லிகா, முன்னாள் எம்பி செல்வக்குமார சின்னையன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். அதே அணியை சேர்ந்த முன்னாள் துணை மேயர் பழனிசாமி தலைமையில் கட்சியினர் மற்றொரு பிரிவாக பிரிந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.