மதுரா மசூதியில் ஆய்வு நீதிமன்றம் உத்தரவு| Court orders probe into Mathura mosque

மதுரா, உத்தர பிரதேச மாநிலம் மதுராவில், கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் அமைந்துள்ளதாக கூறப்படும் ஷாஹி இத்கா மசூதி யில், வரும், ஜன., ௨ம் தேதி ஆய்வு செய்து, ௨௦ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு, மதுரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மதுராவில், கிருஷ்ணர் கோவில் உள்ளது.

இங்கு இருந்த காத்ர கேசவ தேவ் கோவில் இடிக்கப்பட்டு ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த இடத்தில் கிருஷ்ணர் பிறந்ததால் அதை ஹிந்துக்களிடம் ஒப்படைக்கக் கோரியும் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

ஹிந்து அமைப்பான ஹிந்து சேவா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில், ‘வாரணாசி ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

‘இதன்படி நடத்தப்பட்ட ஆய்வில் மசூதியில் உள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. அதுபோல, இத்கா மசூதியில் ஆய்வு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மதுரா நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள தாவது:

கிருஷ்ண ஜென்மபூமி என்றழைக்கப்படும் கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில், ௧௭ம் நுாற்றாண்டில் முகலாய மன்னர் அவுரங்கசீப் உத்தரவில் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, மசூதி வளாகத்தில், தொல்லியல் துறை, வரும், ஜன., ௨ம் தேதிக்குப் பின் ஆய்வு செய்யலாம். தன் ஆய்வறிக்கையை, ஜன., ௨௦க் குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.