சென்னை: தமிழர் வீடுகளில் நாள்தோறும் காலையில் வீட்டு வாசலை சுத்தம் செய்து, கலைநயம் மிக்க கோலங்களை போடுவது வழக்கம். இன்றைய சூழலில் கோலம் போடுவது என்பதே குறைந்து வருகிறது. இந்த நிலையில், நவீன காலத்துக்கு ஏற்ப கோலங்கள் போடும் வகையில், ‘பன்முக நோக்கில் கோலக்கலை’ எனும் ஆன்லைன் பயிற்சி வகுப்பை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்த உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பு வரும் டிச.30, 31, 2023 ஜன.1-ம் தேதிகள் மற்றும் ஜனவரி 6, 7, 8-ம் தேதிகள் என 2 வாரங்களில் (வெள்ளி, சனி, ஞாயிறு) 6 நாட்கள் நடைபெற உள்ளது. தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரம் பயிற்சி வகுப்பு நடைபெறும்.
இந்த வகுப்பின் முதல் வாரத்தில், கைகளால் சுதந்திரமாக வடிவமைத்தல், ஒற்றைப்படை, இரட்டைப்படையில், அடிப்படை வடிவங்களான சதுர, வைர வடிவ கோலங்களை வரைதல், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட புள்ளிகளை வைத்து கோலம் போடுதல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும்.
2-வது வாரத்தில், இசையும் கோலமும் இணைதல், அடிப்படை இசையை பாடிக்கொண்டே கோல மிடும் முறை, கன்யா கோலம், பூஜை அறைக்கோலம், இழைக்கோலம், தண்ணீரில் கரைத்த அரிசி மாவினால் இடப்படும் விசேஷ கோலங்கள் போடும் முறை பற்றி பயிற்சி வழங்கப்படும்.
இப்பயிற்சியை முனைவர் காயத்ரி சங்கரநாராயணன் வழங்க உள்ளார். இவர் நமது பாரம்பரியமான கோலம் மற்றும் கர்னாடக இசையை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஸ்கைப் மூலமாக பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருபவர்.
‘பன்முக நோக்கில் கோலக்கலை’ ஆன்லைன் பயிற்சியில் சேர விரும்புவோர் https://www.htamil.org/kolamclass என்ற லிங்க்கில் ரூ.599 ( ஜிஎஸ்.டி வரி) பதிவு கட்டணமாக செலுத்தி, பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 8248751369 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.