உள்ளாடையில் தங்கத்தை கடத்திய கேரள இளம்பெண்: விமான நிலையத்தில் கைது


துபாயில் இருந்து உள்ளாடையில் 1 கிலோ தங்கத்தை கடத்தி வந்த 19 வயது இளம்பெண் கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 கிலோ தங்கம் கடத்தல்

துபாயில் இருந்து கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்துக்கு காசர்கோட்டை சேர்ந்த ஷேகலா என்ற 19 வயது இளம்பெண் வந்து இறங்கியுள்ளார்.

விமான நிலையத்தில் ஷேகலாவின்(Shahala) நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், அவரை அழைத்து சென்று சோதனை செய்தனர்.

உள்ளாடையில் தங்கத்தை கடத்திய கேரள இளம்பெண்: விமான நிலையத்தில் கைது | 19 Years Old Woman Smuggle 1 Kg Gold Form DubaiShahala-ஷேகலா

இந்த சோதனையில் அவர் துபாயில் இருந்து இந்தியாவிற்கு 1.884 கிலோ தங்கத்தை கடத்தி வந்து இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உள்ளாடைகளில் தங்கம் மறைப்பு

சந்தேகத்தின் அடிப்படையில் ஷேகலாவின் உடைமைகளை முதலில் சோதனையிட்ட விமான நிலைய அதிகாரிகளுக்கு தங்கம் எதுவும் கிடைக்கவில்லை.

இருப்பினும் சந்தேகத்தின் பேரில் மீண்டும் ஷேகலாவை சோதனையிட்டதில் அவர் தன்னுடைய உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் இருந்து 1.884 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த விமான நிலைய அதிகாரிகள், ஷேகலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

உள்ளாடையில் தங்கத்தை கடத்திய கேரள இளம்பெண்: விமான நிலையத்தில் கைது | 19 Years Old Woman Smuggle 1 Kg Gold Form DubaiReuters 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.