வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை கன்னியாகுமரி கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்கு நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது