“சர்ச்சைக்குரிய பெல்காம் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவிக்கவேண்டும்!" – உத்தவ் தாக்கரே கோரிக்கை

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே எல்லைப் பிரச்னை 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. ஓய்ந்திருந்த இப்பிரச்னை மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. இரு மாநில எல்லையில் இம்மாத தொடக்கத்தில் வன்முறை ஏற்பட்டது. இது குறித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு கர்நாடகா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து சட்டமேலவையில் எல்லைப் பிரச்னை குறித்து பேசிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, “இது மொழி மற்றும் எல்லைப் பிரச்னை மட்டும் கிடையாது. மனிதாபிமான பிரச்னை. எல்லையில் வசிக்கும் மராத்தி பேசும் மக்கள் பல சந்ததிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் அன்றாட வாழ்க்கை, மொழி போன்றவை மராத்தியை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் பிரச்னை இருப்பதால் கர்நாடகாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியை மத்திய அரசு யூனியன் பிரதேசமாக அறிவிக்கவேண்டும். எல்லைப் பிரச்னை குறித்து முதல்வர் ஒரு வார்த்தை பேசினாரா? இவ்விவகாரத்தில் அரசின் நிலை என்ன என்பதை தெரிவிக்கவேண்டும்.

உத்தவ்

பிரச்னை நீதிமன்றத்தில் இருப்பதால் சம்பந்தப்பட்ட பகுதியில் எந்த மாற்றமும் செய்யாமல் அதனை அப்படியே பராமரிக்கவேண்டும். இவ்விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் பாதுகாவலனாக இருக்கும் மத்திய அரசின் நிலை என்ன என்பதை தெரிவிக்கவேண்டும். ஆனால் மத்திய அரசு பாதுகாவலரைப் போலா நடந்து கொள்கிறது. மகாராஷ்டிராவோடு இணையவேண்டும் என்று பெல்காம் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியபோது அதன் மீது கர்நாடகா அரசு நடவடிக்கை எடுத்தது.

ஏக்நாத் ஷிண்டே

அதேபோல் மகாராஷ்டிராவில் சில கிராமங்கள் கர்நாடகா, குஜராத், தெலங்கானாவோடு இணையவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றின. அவற்றின் மீது ஷிண்டே அரசு நடவடிக்கை எடுத்ததா?” என்று கேள்வி எழுப்பினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.