“ஜனவரி 9ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்” – சபாநாயகர் அறிவிப்பு

ஜனவரி 9ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் என, சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் பேட்டியளித்த அவர், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி, எத்தனை நாள் கூட்டத்தொடரை நடத்தலாம் என்பது குறித்து, முடிவு செய்யப்படும் என்றார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து வரலாம் என்றாலும், கட்டாயம் இல்லை என்றும், கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இருக்கை விவகாரத்தில் அதே நிலை நீடிப்பதால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையிலேயே ஓ.பன்னீர்செலம் அமர்வார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.