திருச்சி: நாய்க் குட்டிகளுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பள்ளி மாணவி – காரணம் என்ன?

தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்தி உணவளித்து பாதுகாக்க வேண்டுமென பள்ளி மாணவி ஒருவர் குட்டி நாய்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனுகொடுத்தார்.
திருச்சியில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஸ்ருதி என்ற பள்ளி மாணவி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாய் குட்டிகளுடன் வந்து மனு ஒன்றை அளித்தார். அதில், திருச்சி மாநகர பகுதிகளில் அதிக அளவில இருக்கும் தெரு நாய்கள் அதிக அளவில் குட்டிகளை ஈன்று வருகிறது. நாய்களை தொந்தரவாக நினைக்கும் மக்கள் அவற்றை கொல்ல முயற்சிக்கிறார்கள்.
image
அத்தகைய நாய்களுக்கு போதிய அளவு உணவு கிடைக்காமல் உயிரிழக்கின்றன. எனவே நாய்களை பாதுகாக்கும் வகையிலும் அவற்றின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து நாய்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
image
நாய்களுக்கு தன்னார்வலர்கள் உணவு அளித்து வருகின்றனர். ஆனால் அவரவர் சக்திக்கு உட்பட்டு குறைந்த அளவு நாய்களை தான் பராமரிக்க முடிகிறது. மாநகரத்தில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் அதன் குட்டிகளையும் அரசு தான் பராமரிக்க வேண்டும். எனவே தெரு நாய்களை உரிய முறையில் அரசு பராமரித்து அதற்கு கருத்தடை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்..Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.