கன்னியாகுமரி மாவட்டத்தில் வயலுக்குள் கார் கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்த உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளைப் பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் நேற்று கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக காரில் சென்றனர். அப்பொழுது கொல்லங்கோடு அருகே வெள்ளம்குளம்கரை பகுதியில் அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
பின்பு சாலையோர தடுப்புச் சுவரில் மோதிய கார் வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கொல்லங்கோடு தீயணைப்பு துறையினர் காருக்குள் சிக்கி காயமடைந்த நான்கு இளைஞர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து வயலுக்குள் கவிழ்ந்த காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.