விஜய்யா.. அஜித்தா? யார் No.1 ? – நடிகை த்ரிஷா சொன்ன மாஸ் பதில்

தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தைக் கட்டிப்போட்ட இரண்டு உச்ச நட்சத்திரங்களாக அஜித் மற்றும் விஜய் திகழ்கின்றனர். “தல தளபதி” என்றாலே ரசிகர்கள் உற்சாகம் அடைந்துவிடுவார்கள். ஆனால், தலையா தளபதியா என்று வந்துவிட்டால் இரு ரசிகர்களும் சரிசமமாகப் போட்டியிட்டுக் கொள்வார்கள். 

இதனிடையே, தமிழ்நாட்டின் ‘நம்பர் 1’ நட்சத்திரம் விஜய் தான் என்று வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு சொன்ன கருத்து தீயாய் பற்றிக் கொண்டு விவாதப் பொருளாக மாறியது. சர்ச்சையும் ஆனது. இதுதொடர்பாக நடிகை த்ரிஷா பதிலளித்துள்ளார். 

நேர்காணல் ஒன்றின் போது பேசிய த்ரிஷா, விஜய், அஜித்தை விட பெரிய நட்சத்திரமாக கருதப்படுவதைப் பற்றி தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “எனக்குத் தனிப்பட்ட முறையில் எண்கள் விளையாட்டில் நம்பிக்கை இல்லை. இது உங்களின் கடைசிப் படத்தில் இணைக்கப்பட்ட குறிச்சொல் மட்டுமே. உங்களின் கடைசிப் படம் நன்றாக இருந்தால், நீங்கள் நம்பர் 1 ஆகக் கருதப்படுவீர்கள். சிறிது காலத்திற்கு உங்களுக்கு ரிலீஸ் இல்லையென்றால், அந்த நிலையில் வேறு யாராவது இருப்பார்கள்.”

image

அஜித் மற்றும் விஜய்க்கு இடையே ஒருவரைத் தேர்வு செய்ய முடியாது. நான் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பே, அவர்கள் அனுபவ மிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் படங்களை ஒரு ஆடியன்ஸ் ஆக பார்க்கிறோம். திரையரங்கிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்தால், அவர்கள் தங்கள் படங்களைப் பார்க்கும் மகிழ்ச்சிக்காகப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு ரசிகர் மன்றங்கள் இருந்தாலும், இந்த எண்கள் விளையாட்டை நாங்கள் தொடங்கிய ஒன்று என்று நினைக்கிறேன். இருவரும் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்கள். யார் பெரியவர் என்று நான் எப்படிச் சொல்ல முடியும்”என்று த்ரிஷா நியாயப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில், த்ரிஷா 15 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் இன்னும் பெயரிடப்படாத தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், த்ரிஷாவின் நடிப்பில் ராங்கி திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. இது ஒரு ஆக்‌ஷன்-த்ரில்லர் படம் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் அவர் ஒரு பத்திரிகையாளராக நடித்துள்ளார். அவர் கடைசியாக மணிரத்னத்தின் பிரம்மாண்டமான படமான பொன்னியின் செல்வன் – 1 இல் குந்தவி வேடத்தில் தன்னுடைய மிரட்டலான நடிப்பால் மிரட்டி இருந்தார்.

-அருணா ஆறுச்சாமி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.