திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை நகரின் மையத்தில் வ.உ.சி விளையாட்டு மைதானம் உள்ளது. பல வீரர்களும், இங்கு விளையாட வருகிறார்கள். மற்றும் விளையாட்டுப் பயிற்சியும் பெற்று வருகின்றனர். மாலை நேரங்களில், உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்காக ஏராளமானோர் இந்த மைதானத்திற்கு வந்து செல்கின்றனர்.
நேற்று இரவு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மது அருந்திவிட்டு மைதானத்துக்கு வந்து அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து பேசினர். பின்னர் அவர்களது பெற்றோரை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.