புதுடெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனால், நேற்று மதியம் 12 மணிக்கு டெல்லியில் உள்ள எய்மஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பிஎப்.7 வகை கொரோனா வைரசால் அவர் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே, நிர்மலா சீதாராமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மீண்டு வந்தவர்.