அகவிலைப்படி அரியர் தொகை, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. 18 மாத நிலுவைத் தொகைக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் புதிய ஆண்டில் கொரோனா தொற்றுநோய்களின் போது நிறுத்தப்பட்ட 18 மாத டிஏ நிலுவைத் தொகையை அரசாங்கம் வழங்க வாய்ப்புள்ளதாக நம்புகிறார்கள். இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கு பிறகு அரசு ஊழியர்களின் கணக்கில் இந்தப் பணத்தை வரவு வைக்கும் என்ற நம்பிக்கை தற்போது மேலோங்கியுள்ளது.
அமைச்சரவை செயலாளருக்கு கடிதம்
தேசிய கவுன்சில் செயலாளர் (பணியாளர்கள் தரப்பு) சிவகோபால் மிஸ்ரா இது தொடர்பாக அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியதாகவும், ஆனால் சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், அந்த தொகையை ஊழியர்களுக்கு மீண்டும் அளிக்கலாம் என கூறப்பட்டதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை
அகவிலைப்படி நிலுவைத்தொகை குறித்து ஊழியர்கள் சார்பில் பலமுறை கோரிக்கைகள் எழுப்பப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனுடன், நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதால், இந்த நிலுவைத் தொகையை அரசாங்கம் நேரடியாக புத்தாண்டில் ஊழியர்களின் கணக்கிற்கு மாற்றும் என நம்பப்படுகிறது.
இந்த பெரிய முடிவை அரசு எடுக்கக்கூடும்
இந்த விவகாரத்தில் நீண்ட நாட்களாக மத்திய அரசு பெரிய முடிவை எடுக்கக்கூடும் என ஊடகங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், தற்போது, அரசு தரப்பில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இந்த பணத்தை வழங்குவது குறித்து எந்த சமிக்ஞையும் கொடுக்கப்படவில்லை. ஊழியர்களின் தொடர் கோரிக்கையால் அரசு விரைவில் இதை வழங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் மட்டுமே மேலோங்கியுள்ளன.
3 அகவிலைப்படி தவனைகள் முடக்கப்பட்டன
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த பணத்தை 3 தவணைகளில் பெறக்கூடும் என கூறப்படுகின்றது. கொரோனா காரணமாக மூன்று அகவிலைப்படி தவணைகள் முடக்கப்பட்டன. கோவிட்-19 தொற்றுநோய்களின் போது மத்திய அரசு ஊழியர்கள் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை அகவிலைப்படியை பெறவில்லை.
எவ்வளவு பணம் பெற முடியும்?
மத்திய அரசு ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகையை வழங்க அரசு ஒப்புக் கொண்டால், அவர்களின் கணக்கில் பெரும் தொகை சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. லெவல்-3ல் உள்ள ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், லெவல்-13 அல்லது லெவல்-14 ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை இருக்கக்கூடும்.