பல்ராம்பூர் உத்தர பிரதேசத்தில் ரயில்கள் மோதி, 90 ஆடுகளும், எட்டு கழுகுகளும் உயிரிழந்தன.
உ.பி., மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தின் விஷன்பூர் கோடர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபுராம். இவர், நேற்று முன்தினம் தன் 90 ஆடுகளை, கோரக்பூர் – கோண்டா ரயில் பாதையில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது,கோரக்பூரில் இருந்து லக்னோ சென்ற ரயில், ஆடுகள் மீது மோதியது.
இதில், ஆடுகள் அனைத்தும் உயிரிழந்த நிலையில், அந்தப்பகுதியில் உடனடியாக கழுகுக்கூட்டங்கள் குவிந்தன. அப்போது அங்கு வந்த மற்றொரு ரயில், கழுகுகள் மீது மோதிவிட்டு சென்றது. இதில் எட்டு கழுகுகள் உயிரிழந்தன.
இந்த சம்பவம், அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட சமாஜ்வாதி எம்.எல்.ஏ.,வான எஸ்.பி.யாதவ், ”ஆடுகளை இழந்த பிரபுராமுக்கு, ரயில்வே மற்றும் மாநில அரசு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,” என வேண்டுகோள் விடுத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement