தனது காதல் மனைவியுடன் அவுட்டிங் சென்றுள்ள போட்டோவை ஷேர் செய்துள்ள ரவீந்தர் தனது 8வது அதிசயம் தனது மனைவிதான் என உருகியுள்ளார். அதற்கு மகாலட்சுமி கொடுத்துள்ள ரியாக்ஷன் அதற்கும் மேல் உள்ளது.
விஜே மகாலட்சுமிசின்னத்திரை நடிகையான விஜே மகாலட்சுமியும் லிப்ரா புரடெக்ஷன்ஸ் ரவீந்தரும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ரவீந்தர் தயாரிப்பில் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்து வந்தார் மகாலட்சுமி. அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து 2 ஆண்டுகள் ரகசியமாக காதலித்து வந்த அவர்கள் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.Nayanthara: மகன்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்… தெறிக்கவிடும் விக்கி நயன்…
இரண்டாவது திருமணம்ஏற்கனவே விவாகரத்தான மகாலட்சுமிக்கு சச்சின் என்ற மகன் உள்ளார். ரவீந்தரும் திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்தான். இருவருமே காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. பணத்திற்காகதான் மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என நெட்டிசன்கள் விளாசி வந்தனர்.
கொண்டாடும் ரவி மகாகுண்டாக இருக்கும் ரவீந்தரை மகாலட்சுமி திருமணம் செய்ததால் இந்த விமர்சனங்கள் எழுந்தன. இதனால் கடுப்பான மகாலட்சுமியும் ரவீந்தரும் தங்களின் வாழ்க், தங்களின் விருப்பம் என பதிலடி கொடுத்து வந்தனர். தொடர்ந்து தங்களின் வேலை, அவுட்டிங், டின்னர் என வாழ்க்கையை கொண்டாடி வருகின்றனர் மகாலட்சுமியும் ரவீந்தரும்.
என் எட்டாவது அதிசயம்சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ரவீந்தரும் மகாலட்சுமியும் தங்களின் ரொமான்டிக் போட்டோக்களையும் அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது மகாவுடன் அவுட்டிங் சென்றுள்ள போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ரவீந்தர். மேலும் அந்த போட்டோவுக்கு என் வாழ்க்கையின் எட்டாவது அதிசயம் என் மனைவிதான் என கேப்ஷன் கொடுத்துள்ளார் ரவீந்தர்.
நீங்கள் இல்லாமல் நான் இல்லை..ரவீந்தரின் இந்த பதிவை பார்த்த மகாலட்சுமி, மக்கள் என்ன சொன்னாலும், என் இதயம் துடிக்கும் வரை நான் உங்களை நேசிப்பேன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை… நீங்கள் தான் என் எல்லாமும் என ரவீந்தரின் பதிவை தூக்கி சாப்பிடும் அளவுக்கு பதில் கமெண்ட் கொடுத்து ரவீந்தர் மீதான தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இருவரும் மாறி மாறி உருகுவதை பார்த்த நெட்டிசன்கள் ஹார்ட்டின்களை பறக்க விட்டு வருகின்றனர்.
அழகான ஜோடிஇன்னும் சில நெட்டிசன்கள் உங்களின் காதல் அழகாக உள்ளது. அதே சமயம் பொறாமையாகவும் உள்ளது என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் அழகான ஜோடி என்றும் இருவரும் இதே அன்புடன் எப்போதும் இருக்க வேண்டும் என்றும் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மகாலட்சுமி தற்போது முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் சேனல்களில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவீந்தர் இன்ஸ்டா போஸ்ட் View this post on Instagram A post shared by Ravindar Chandrasekaran (@ravindarchandrasekaran)