சென்னையில் பிரம்மாண்ட பொருட்காட்சி.. எப்போது? எங்கு தெரியுமா?

சென்னை தீவுத்திடலில் வரும் 30 ஆம் தேதி மாலை பொருட்காட்சி தொடங்குகிறது. 

இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 8 லட்சம் சதுர அடி பரப்பளவில் பொருட்காட்சி அமைக்கப்படுகிறது. 49 அரசுத் துறை அரங்கம், 69 உணவு கடைகள், 290 கடைகள் இந்திய அளவில் உள்ள பொருள்கள் விற்பனை செய்யப்படும் வகையில் கடைகள் அமைக்கப்படுகிறது. பொழுதுபோக்கு கண்காட்சியில் 32 ராட்டினங்கள் இடம் பொறும். அத்துடன் துபாய் சிட்டி, லண்டன் பாலம் மாதிரி இதுவரை இல்லாத ஏற்பாடாக இருக்கும். பொருட்காட்சி மையத்தில் காவல்துறை பாதுகாப்பு, தீயணைப்புத் துறை பாதுகாப்பு, ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவர் வசதி இருக்கும், 40 கழிப்பிடமும் அமைக்கப்படுகிறது. 5 இடங்களில் வாகன நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
image
கடந்த கால பொருட்காட்சியை விட இந்த வருடம்  சிறப்பாக ஏற்பாடு செய்யப்படுகிறது. மாமல்லபுரம் கோயில், தமிழக முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி, அரசின் சிறப்பை விளக்கி முகப்பு வளைவு இருக்கும். 20 லட்சம் பேர் வரை பொருட்காட்சிக்கு வர வாய்ப்புள்ளது என்று எதிர்ப்பாக்கப் படுகிறது. பெரியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.25 நுழைவு கட்டணம், 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கும், மாணவர்களுக்கும் ரூ. 25 நுழைவு கட்டணம் என்று அமைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் வரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும். விடுமுறை நாள்களிலும் இதே முறையில் செயல்படும். மற்ற நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.