திருவாரூர் : வெளிநாட்டில் உயிரிழந்த நபர்.!! உடலை கொண்டுவர உறவினர்கள் வலியுறுத்தல்.!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சித்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் – கோமதி தம்பதியினர். இவர்களுக்கு லட்சுமி, ஷாலினி மற்றும் சிவானி என்று மூன்று மகள்கள் உள்ளனர்.

செந்தில்குமார் கடந்த 2013 ஆண்டு முதல் ஒன்பது வருடங்களாக சவுதி அரேபியாவில் டேங்கர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 23ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, செந்தில்குமாரின் மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாலும், அவருக்கு மூன்றும் பெண் குழந்தைகளாக இருப்பதாலும் அவரது உடலை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டு வறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இதையடுத்து, செந்தில்குமாரின் மனைவி கையெழுத்திட்ட மனுவை உறவினர் நவநீதகிருஷ்ணன் மற்றும் சேமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு உள்ளிட்டோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.