நிருபரை மோசமான வார்த்தைகளால் விளாசிய டொனால்டு ட்ரம்ப்! ஒரே பதிவில் பதிலடி கொடுத்த பெண்


தன்னை விமர்சித்து கட்டுரை எழுதிய பெண் நிருபரை, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடுமையாக விளாசியுள்ளார்.

டிரம்ப் மீது விமர்சனம்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் உலகம் சுருங்கி விட்டதாக பெண் நிருபர் ஒலிவியா நுஸி, பல ஆதாரங்களை மேற்கோள் காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், ‘டிரம்ப்பின் உலகம் மிகச் சிறியதாக மாறிவிட்டது. இந்த நாட்களில் அவர் Mar-லாகோவை விட்டு வெளியேறவில்லை. அவர் வெளியே செல்வார், கோல்ஃப் விளையாடுகிறார், திரும்பி வருவார்.

மேலும் ஓய்வெடுக்கிறார்.

குறைந்தபட்சம் 28 நாட்களுக்கு புளோரிடா மாகாணத்தை விட்டு டிரம்ப் வெளியேறவில்லை’ ஆதாரங்கள் தெரிவித்ததாக கூறியிருந்தார்.

டொனால்டு டிரம்ப்/Donald Trump

@ OSHUA ROBERTS/GETTY IMAGES


டிரம்பின் பதிவு

இவை டிரம்பை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நபராக சித்தரிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இதுதொடர்பாக டிரம்ப் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில் குறித்த பெண் நிருபரை கடுமையாக சாடியுள்ளார்.

அவரது பதிவில், ‘போலி மற்றும் ஊழல் செய்திகள் இன்னும் மோசமாகி வருகின்றன! உதாரணமாக, நான் ஒரு குறுகிய தொலைபேசி நேர்காணலை ஒருமுறை நன்றாக செய்ய ஒப்புக் கொண்டேன். ஆனால் இப்போது நியூயார்க் பத்திரிகையின் கடைசிக் கட்டம் மற்றும் தோல்வியுற்றதாகும்.

நிருபர் நடுங்கும் மற்றும் கவர்ச்சியற்றவராக இருக்கிறார். பாறைகள் போல பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

ஒலிவியா நுஸி/Olivia Nuzzi

உண்மையில், நீண்ட காலத்திற்கு முன் என்னைப் பற்றி ஒரு கண்ணியமான கதையை எழுதினார். அவர் பெயர் ஒலிவியா நஸி .

எப்படி இருந்தாலும் இந்த கதை போலியான செய்தியாகும். அவரிடம் சரியான ஆதாரங்கள் இல்லை. நான் நம் சிறந்த அமெரிக்காவுக்காக கடுமையாக போராடுகிறேன்’ என தெரிவித்தார்.

அவருக்கு பதில் கொடுக்கும் வகையில் ஒலிவியா தனது பதிவில், சூரிய கிரகணத்தை டிரம்ப் வெறும் கண்களால் பார்க்கிறார் என்பதை குறிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், தனது வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என்ற கருத்தை டிரம்ப் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.