கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை மகாபலிபுரத்தில் உலாவிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பாபெட் மற்றும் கூகுள் நிறுவனம் இரண்டு இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை என்பவர் சிஇஓவாக இருக்கின்றார். தமிழகத்தில் இவர் பள்ளி படிப்புகளை படித்துவிட்டு ஐஐடி படிப்பை கரக்பூரில் முடித்தார்.
அதற்பின் அமெரிக்காவில் இருக்கும் தான் போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது மேற்படிப்பை தொடர்ந்தார். இப்ப என் நிலையில் குடும்பத்துடன் தமிழகத்திற்கு வந்த சுந்தர் பிச்சை மகாபலிபுரத்திற்கு விசிட் அடித்துள்ளார்.
தனது குடும்பத்துடன் சேர்ந்து சுற்றுலா தளமான மகாபலிபுரத்தில் இருக்கும் பல்லவர் கால கோவில் சிற்பங்களை கண்டு ரசித்தார். அவர் மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து வலம் வந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.