திருநெல்வேலி மாவட்டத்தில் முன்விரோதத்தால் வாலிபரை அறிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் இட்டேரி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பேச்சு முத்து. இவரது மகன் முத்தையா(26) பாளையங்கோட்டையில் உள்ள பழைய பேப்பர், இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கொடையில் முத்தையா வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த சென்னல்பட்டியை சேர்ந்த இசக்கிபாண்டி என்பவர் தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் முத்தையாவை வெட்டியுள்ளார். பின்பு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து முத்தையாவை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு குதிரை வண்டி பந்தயம் தொடர்பாக முத்தையாவிற்கும், இசக்கிபாண்டிக்கும் இருந்த முன்விரோதத்தால் இந்த சம்பவம் நடந்தது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முத்தையாவை அறிவாளால் வெட்டிய இசக்கிபாண்டியை தீவிரமாக தேடி வருகின்றனர்.