நடைபயிற்சி மேற்கொண்ட மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அரசு பொறியியல் கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

நாகம்மாள் தோட்டம் பகுதியில் வசித்து வரும் விஸ்வநாதன் மகன் வினித்குமார், கருப்பூரிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

நண்பர்களுடன் வழக்கம் போல நடைபயிற்சிக்கு சென்ற போது, மயங்கி விழுந்தவரை வாக்கிங் சென்றுக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

எனினும், வினித்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் மாணவரின் இறப்பிற்கான காரணம் குறித்து அஸ்தம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.