புதுடில்லி : கடந்த டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நேற்று வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல், தொடர்ந்து, ௧௦வது மாதமாக, ௧.௪ லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக உள்ளது. கடந்த மாதத்தில், 1.49 லட்சம் கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ௨௦௨௧ டிச., மாதத்துடன் ஒப்பிடுகையில், ௧௫ சதவீத வளர்ச்சியாகும்.
இதில் மத்திய ஜி.எஸ்.டி., 26 ஆயிரத்து 711 கோடி ரூபாய்; மாநில ஜி.எஸ்.டி., 33 ஆயிரத்து 357 கோடி ரூபாய்; ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., 78 ஆயிரத்து 434 கோடி ரூபாய்; ‘செஸ்’ எனப்படும் கூடுதல் வரி, 11 ஆயிரம் கோடி ரூபாய்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement