
'துணிவு' படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியீடு.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 'துணிவு' திரைப்படம் உருவாகி உள்ளது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ஒரே நாளில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இதை தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியாகியுள்ளது. வெளியான 18 மணிநேரத்தில் 3.80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. தெலுங்கில் 'தேகிம்பு' என்கிற பெயரில் இப்படம் வெளியாகிறது.