மதுரை: ஆன்லைன் சூதாட்ட தடை அவரசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநர் பேரவை நிறைவேற்றிய அதே சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தர மறுப்பது ஏன் என்று பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கட்சியை பலப்படுத்துவதற்காக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்;
ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநர் பேரவை நிறைவேற்றிய அதே சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தர மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஆன்லைன் ரம்மியால் 10-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆளுநரே பொறுப்பு என்று அன்புமணி தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணியில் போட்டியிடுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி கூட்டணி அமைத்து வெற்றி பெற வேண்டும் என்பது தங்கள் நோக்கம் என்று தெரிவித்தார்.