காஞ்சிபுரம் மாவட்டத்தில் உடல் எடையை குறைக்க மருந்து சாப்பிட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் கரு பகுதியை சேர்ந்தவர் சூர்யா (21). இவர் பால் பாக்கெட் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவர் உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனம் வழங்கிய மருந்துகளை சாப்பிட்டு வந்துள்ளார்.
கடந்த பத்து நாட்களாக சூர்யா மருந்து சாப்பிட்டு வந்த நிலையில், வேகமாக உடல் எடை குறைந்துள்ளது. மேலும் சூர்யாவுக்கு திடீரென சம்பவத்தன்று மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை மீட்டு உறவினர்கள் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த சூர்யா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.