ஜேர்மனியில் அதிவேகமாகச் சென்ற கார் ஒன்றை நிறுத்துமாறு பொலிசார் உத்தரவிட்டும் அந்த கார் நிற்காமல் செல்லவே, பொலிசார் அந்த காரைத் துரத்திச் சென்றுள்ளார்கள்.
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார்
பவேரியாவிலுள்ள Bamberg நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மணிக்கு 110 கிலோமீற்றர் வேகத்தில் வந்துகொண்டிருந்த கார் ஒன்றை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்கள்.
ஆனாலும் கார் நிற்காமல் செல்லவே, பொலிசார் அந்த காரைத் துரத்திச் சென்றுள்ளார்கள்.
பொலிசார் அந்தக் காரைத் துரத்த, காருக்குள் பார்த்த அவர்கள் அந்த காரின் சாரதி கண்களை மூடி தூங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்துள்ளார்கள். தங்கள் கார் ஹாரனை ஒலித்தபடி அவர்கள் அந்தக் காரை பின்தொடர, சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு அந்தக் காரின் சாரதி கண் திறந்துள்ளார்.
File pic
தெரியவந்த உண்மை
அந்த சாரதி தனது காரை ஆட்டோ பைலட், அதாவது தானாக இயங்கவிட்டுவிட்டு தூங்கிவிட்டிருக்கிறார். அத்துடன், தான் ஸ்டியரிங் வீலில் கை வைத்துள்ளதை கார் உணர்வதற்காக, தனியாக ஒரு கருவியையும் அத்துடன் இணைத்துள்ளார்.
அவரது ஓட்டுநர் உரிமத்தைப் கைப்பற்றிய பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர்.
ஜேர்மனியில், சாரதிகள் முழுமையாக தானியங்கி வாகன வசதிகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.