மதுபோதையில் பயணி மீது சிறுநீர் கழித்த ஏர் இண்டியா பைலட்! அம்பலமான செய்தி வைரல்

நியூடெல்லி: விமானப் பயணம் என்பது, சுகானுபவமாக இருக்கும் என்றால், ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த பைலட்டின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை ஏர் இந்தியா அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபர் குடிபோதையில் இதைச் செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் நவம்பர் 26 அன்று நடந்ததாக தெரிகிறது.

நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இண்டியா விமானத்தில் பயணித்த பெண், பிசினஸ் கிளாசில் பயணித்துக் கொண்டிருந்தார். அந்த பெண் மதிய உணவுக்குப் பிறகு விளக்கு அணைக்கப்பட்டபோது பைலட் தன்னிடம் வந்து, பேண்ட் ஜிப்பை அவிழ்த்து சிறுநீர் கழித்ததால் அதிர்ச்சியடைந்தார்.

சிறுநீர் கழித்த பிறகும் அந்த பைலட் நீண்ட நேரம் அங்கேயே நின்றுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள், விமானப் பணியாளரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பெண், நேரடியாக டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரனிடம் புகார் அளித்தார். ப்யணியைத் தவிர, கேபின் குழுவினரும் புகார் அளித்தனர். இந்த மோசமான சம்பவத்திற்குப் பிறகு , பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வெறும் பைஜாமா மற்றும் செருப்பு மட்டுமே வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த ​​​​சம்பவம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், விமான நிறுவனம், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.  

இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சம்பவம் தொடர்பான தகவல்கள் எங்களிடம் உள்ளன. இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளோம், அவர்கள் விசாரணை செய்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள். விசாரணை மற்றும் புகார் செயல்முறை தொடர்கிறது, நாங்கள் பாதிக்கப்பட்ட பயணி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு, புகார் தொடர்பாக பணியாற்றி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் போலீசில் புகார் அளித்துள்ளது. விமான நிறுவனம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க நிறுவன மட்டத்திலும் ஒரு உள் குழுவை அமைத்துள்ளது, அத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்களை ‘நோ ஃப்ளை லிஸ்டில்’ சேர்க்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.