ஹைட்ரஜன் மூலம் எரிபொருள் தயாரிக்க ரூ.19,744 கோடி ஒதுக்கீடு: அனுராக் தாக்கூர் | Allocation of Rs 19,744 crore for hydrogen fuel production: Anurag Thakur

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஹைட்ரஜன் மூலம் பசுமை எரிபொருள் தயாரிக்க ரூ.19,744 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார்.

latest tamil news

இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஹைட்ரஜன் மூலம் பசுமை எரிபொருள் தயாரிக்க ரூ.19,744 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. எதிர்காலத்தில் பசுமை ஹைட்ரஜனின் உலகளாவிய மையமாக இந்தியா இருக்கும். ஹைட்ரஜன் மூலம் மாசு உண்டாக்காத எரிபொருள் உருவாக்க முடியும்.

உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊக்கத்தொகைகள் வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகைகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும். இந்த பணியை செயல்படுத்த, அரசு 19, 744 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்துள்ளது.

latest tamil news

பிரசார் பாரதியின் ஒளிபரப்பு உள்கட்டமைப்பின் குடிமைப் பணிகளின் விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றில் நிதியுதவி அளிக்க ரூ.2,539.61 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒளிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் நெட்வொர்க் மேம்பாடு திட்டத்திற்கு இது பெரிதும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.