டெல்லி சம்பவம்: உயிரிழந்தப் பெண் விவகாரத்தில் மேலும் 2 பேரை தேடும் காவல்துறை

தலைநகர் டெல்லியில் காரில் சிக்கி உயிரிழந்தப் பெண் விவகாரத்தில் 7 பேருக்கு சம்பந்தம் உள்ளது என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி ஒன்றாம் தேதி கஞ்சவாலா பகுதியில் இளம் பெண்ணின் உடல் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், அந்தப் பெண் தோழி உடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும், பின் கார் ஒன்றில் மோதியதில் வெகுதூரம் சாலையில் உயிரிழந்த நிலையில் இழுத்துச்செல்லப்பட்டதும் தெரியவந்தது.
இந்த சம்பவத்தையடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் அதிரடியான திருப்பங்கள் நாளுக்குநாள் கிடைத்து வருகிறது. ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவரின் பெயரை பட்டியலில் இணைத்துள்ளது டெல்லி காவல்துறை. இது குறித்து காவல்துறை தரப்பினர் கூறுகையில், “விசாரணையில், காரை தீபக் ஓட்டவில்லை, அமித் ஓட்டினார் என்பதும் தெரியவந்தது. மேலும் அசுதோஷ் மற்றும் அங்குஷ் கண்ணா ஆகியோரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இருவரையும் கைது செய்ய முயற்சித்து வருகிறோம்.
image
பிரேதப் பரிசோதனையின் முடிவில், உயிரிழந்த அஞ்சலி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரியவந்துள்ளது” என்று கூறியுள்ளனர். மேலும் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேரில் கண்ட சாட்சியின் வாக்குமூலத்தை நாங்கள் பதிவு செய்துள்ளோம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவரின் கைத்தொலைபேசி இன்னும் மீட்கப்படாதநிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவருக்கும் இடையே விபத்துக்கு முன்பே தொடர்ப்பு இருப்பதாக தெரியவில்லை என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 10 குழுக்கள் பணியாற்றி வருவதாக காவல்துறை தெரிவித்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களும் வேறுபடுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

We have arrested 5 accused and we are interrogating them. During interrogation, we found that two more people are involved in the incident. Our team is conducting raids. We have recorded the statement of the eye witness: Special CP(L&O) Sagar Preet Hooda pic.twitter.com/rQdvKZo55u
— ANI (@ANI) January 5, 2023

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.