சென்னை: தமிழ்நாடு என்ற சொல் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு ம.ம.க.தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார். தன்னை ஆளுநர் என்பதை மறந்து பாஜகவின் அடிமட்டத் தொண்டரை போல ஆளுநர் ஆர்.என்.ராவி பேசிக் கொண்டிருக்கிறார். மேலும், அரசியல் சாசனப் பதவியில் இருந்து கொண்டு அரசியல் பேசி கண்ணியமிக்கப் பதவிக்கு இழுக்கை தேடி தந்து கொண்டிருக்கிறார் என அவர் தெரிவித்தார்.
