நியூயார்க்கிலிருந்து, டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த மூதாட்டி மீது, மதுபோதையில் சிறுநீர் கழித்த நபரை, பெங்களூருவில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி, நிகழ்ந்த விவகாரம் குறித்து, ஏர் இந்தியா நிறுவனம் இந்த வாரம் புகார் அளித்தது. அதன்படி, விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சங்கர் மிஷ்ரா மீது, 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
சங்கர் மிஷ்ராவை போலீசார் தேடி வந்த நிலையில், தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து அவரை கைது செய்தனர். சங்கரை டெல்லி அழைத்து வந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.