உங்கள் குடும்பத்தை கொல்வது எப்படி? இளவரசர் ஹரி ‘Spare’ புத்தகத்தால் பிரித்தானியாவில் கவனம் ஈர்த்த புகைப்படம்



இளவரசர் ஹரியின் Spare புத்தகம் விற்பனை செய்யப்படும் ஒரு கடையில் அந்த புத்தகத்துக்கு அருகே வைக்கப்பட்டுள்ள மற்றொரு புத்தகத்தின் புகைப்படம் வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உங்கள் குடும்பத்தை எப்படிக் கொல்வது….

Spare என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ஹரியின் நினைவுக்குறிப்புகள் புத்தகத்தில், வாழ்க்கையின் பல கட்டத்தில் தாம் உணர்ந்ததை அவர் பகிந்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில் பிரித்தானியாவில் உள்ள ஒரு புத்தகக் கடை, ‘உங்கள் குடும்பத்தை எப்படிக் கொல்வது’ (‘How to Kill Your Family’) என்ற தலைப்பு கொண்ட நாவலுக்கு அடுத்த சாளரத்தில் Spare புத்தகத்தை காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

வைரலான புகைப்படம்

பெர்ட்ஸ் புக்ஸ் என்ற கடை தான் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.

அந்த புத்தகத்தின் கதை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 2022ல் ‘How to Kill Your Family’ புத்தகம் தான் தங்கள் கடையில் அதிகம் விற்பனையான புத்தகம் என பெர்ட்ஸ் புக்ஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.