புதுடில்லி : நம் நாட்டின் முப்படைகளையும் பலப்படுத்தும் நோக்கில் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய 4 276 கோடி ரூபாயை ஒதுக்கி ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் புதுடில்லியில் நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் நம் நாட்டின் ராணுவம் விமானப்படை மற்றும் கடற்படையை பலப்படுத்தும் நோக்கில் பிரம்மோஸ் ஏவுகணை மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 4276 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement