விரைவில் ஆவின் நிர்வாகத்தின் சார்பாக குளிர்பானங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னை தலைமை செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர், ஆவின் நிர்வாகத்தின் சார்பில் குளிர்பானங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆவின் பால், பாக்கெட்டுகளில் விளம்பரம் செய்வது பற்றி ஆலோசனை நடந்து வருகின்றது. மேலும், கோடை காலம் ஆரம்பிக்க இருக்கிறது.எனவே கோடை காலத்தில் ஆவின் ஐஸ்கிரீம்கள் புதிய வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.’ என்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.