”அரிய உயிர்ச்சூழல் அமைவு சேது கால்வாய் திட்டம் என்ற பெயரில் அழியப்போகிறது” – நண்பர்கள் அமைப்பினர் குற்றச்சாட்டு

சேது சமுத்திர திட்டத்தின் கீழ் 89 கிலோ மீட்டர் நீளத்திற்கு 12 மீட்டர் ஆழத்திற்கு கடல் தூர்வாரப்படும் என்பதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த அறிக்கையில், மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள 21 தீவுகளை உள்ளடக்கிய 10 அயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு பரந்து விரிந்திருக்கும் கடற்பரப்பு,  கடற்புற்களும், பவளப்பாறைகளும் சேர்ந்து பல கடல் வாழ் உயரினங்களுக்கு மேய்ச்சல் இடமாக மன்னார் வளைகுடா உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிலத்தைத் தோண்டி அமைக்கப்பட்ட சூயஸ், பனாமா போன்ற கால்வாய்கள் பல வார பயணத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்தும் நிலையில், சேது கால்வாயோ 30 மணி நேரத்தையும், 424 நாட்டிகல் மைல் தூரத்தையும் மட்டுமே மிச்சப்படுத்துவதால் கப்பல் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபமிருக்காது என்றும் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.