கத்தார் 2022 FIFA உலகக்கோப்பைக்கு பிறகு லியோனல் மெஸ்ஸி, கைலியின் எம்பாப்பே மற்றும் நெய்மர் ஜுனியர் மூவரும் ஒரே போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
மூவரும் இணையும் முதல் PSG ஆட்டம்
பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) மற்றும் ரென்னெஸ் (Stade Rennais) இடையிலான Ligue 1 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) நடைபெறவுள்ளது.
இப்போட்டியில், முன்னணி வீரர்களான லியோனல் மெஸ்ஸி, கைலியின் எம்பாப்பே மற்றும் நெய்மர் ஜுனியர் மூவரும் இணைந்து விளையாடவுள்ளனர்.
Getty Images
கைலியின் எம்பாப்பே
உலகக்கோப்பையில் அதிக கோல்களை அடித்து ‘கோல்டன் பூட்’ விருதை வென்ற பிரான்ஸ் அணியின் வீரர் கைலியின் எம்பாப்பே, இறுதிப்போட்டி முடிந்ததும் கத்தாரில் இருந்து திரும்பி வந்து, PSG-ன் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடினார்.
அதன்பிறகு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, தனது நண்பரும் PSG-ன் சக வீரருமான அச்ராஃப் ஹக்கிமியுடன் நியூயார்க் சென்ற எம்பாப்பே, இன்று (வியாழக்கிழமை)மீண்டும் பயிற்சிக்குத் திரும்பினார். மெஸ்ஸிக்கு PSG அணியில் வரவேற்பு அணிக்கப்பட்டபோது அவர் அங்கு இல்லை.
Getty
மெஸ்ஸி
அதே நேரம், உலக்கோப்பை வெற்றிக்குப் பிறகு கொண்டாட்டங்களுக்காக அர்ஜென்டினாவுக்கு சென்ற மெஸ்ஸி, ஜனவரி 2-ஆம் திகதி PSG கிளப்புடன் இணைந்தார். அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது, மற்றும் நினைவுப்பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.
இன்று (வியாழக்கிழமை) மூவரும் பயிற்சிக்கு திரும்பினர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) நடைபெறவுள்ளது PSG vs Rennes போட்டியில் மூவருடன் இணைந்து விளையாட இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.