உலகின் நம்பர் 1 டெக்னாலஜி நிறுவனமாக இருக்கக்கூடிய ஆப்பிள் நிறுவனம் அதன் முதல் விலை குறைந்த ஏர் போட்ஸ் கருவியை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய கருவி 2024 ஆம் ஆண்டு அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்யும் விலை குறைந்த ஆடியோ கருவி என்றால் அது Airpods Gen 2 ஆகும். இதன் விலை 14,900 ஆயிரம் ரூபாய் ஆகும். இதற்கு அடுத்ததாக Airpods Gen 3 19,900 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன் Airpods Pro 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதன் Airpods Max 59,900 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல Airpods Max Gen 4 என்ற அடுத்த ஜெனரேஷன் கருவியையும் உருவாக்கிவருவதாக தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்க முக்கிய காரணம் அதன் மூன்றாவது ஜெனெரஷன் ஏர் போட்ஸ் அவ்வளவாக மக்கள் மத்தியில் விற்பனை ஆவதில்லை. இதே விலைக்கு இதை விட அதிக வசதிகளுடன் சந்தையின் Sony, Bose, Samsung ஆகிய நிறுவனங்கள் சிறந்த வசதிகள் கொண்ட TWS கருவிகளை விற்பனை செய்கின்றன. இதனால் விலை குறைவாக விற்பனை செய்வதன் மூலம் அதிகம் பேரை ஆப்பிள் கருவிகளை வாங்கவைக்கமுடியம் என்று ஆப்பிள் நிறுவனம் கருதுகிறது.
ஆனால் இவை விலை குறைவாக இருக்கும் காரணத்தால்
ANC (Active Noise Cancellation)
வசதி இடம்பெறாது. இந்த வசதி Airpods Pro சீரிஸ் கருவிகளில் மட்டுமே உள்ளது. இதன் Airpods Gen 2 மற்றும் Gen 3 ஆகிய இரண்டும் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டாலும் அவற்றில் கூட இந்த ANC வசதி இடம்பெறவில்லை. ஆனால் இதே செக்மென்ட்டில் மிகவும் விலை குறைவாகவே ANC வசதி பல TWS earbuds கருவிகளில் கிடைக்கிறது. விலை அதிகம் இருந்தும் இந்த வசதிகள் ஆப்பிள் கருவிகளில் கிடைப்பதில்லை.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்